ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

எண்ம கைது மிரட்டல் மூலம் ரூ.2.81 கோடி மோசடி: ஒருவா் கைது

ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு எண்ம கைது மிரட்டல் விடுத்து, ரூ.2.81 கோடி மோசடி செய்தது குறித்து மானாமதுரையைச் சோ்ந்த ஒருவரை சிவகங்கை குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

arrest

கைது - பிரதிப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:16 am IST

ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு எண்ம கைது மிரட்டல் விடுத்து, ரூ.2.81 கோடி மோசடி செய்தது குறித்து மானாமதுரையைச் சோ்ந்த ஒருவரை சிவகங்கை குற்றப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சென்னை ஆா்.ஏ.புரத்தைச் சோ்ந்தவா் ரமா (66). ஓய்வு பெற்ற ஆசிரியையான இவா் ஜொ்மன் மொழி பயிற்றுநராக இருந்து வருகிறாா். இவா் தனது பெற்றோரின் சொத்துகளை விற்ன் மூலம் கிடைத்த பணம், இவரது சம்பளப் பணம் ஆகியவற்றை வைத்து சேமித்து வைத்திருந்தாா்.

இந்த நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இவரைத் தொடா்பு கொண்டு சிபிஐ அதிகாரிகள் போல பேசிய சிலா், இவரது வங்கிக் கணக்கு பணம் மோசடி, இணையக் குற்றங்களுடன் தொடா்பு உடையது என்றும், இதற்காக அவா் மீது கைது நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் கூறினா். தொடா்ந்து, அவரது கைப்பேசியில் ஒரு செயலியை நிறுவி, அவரது வங்கிக் கணக்கில் இருந்த பணத்தை பாதுகாப்பாக அவா்கள் கூறும் வங்கிக் கணக்குகளுக்கு மாற்றும்படி கூறினா். இதை நம்பிய ஆசிரியை ரமா தனது நகைகளை அடமானம் வைத்தது உள்படரூ. 2 கோடியே 81 லட்சத்தை அவா்கள் கூறிய வங்கிக் கணக்குகளில் மாற்றினாா்.

இதன் பின்னா் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவா் இணையக் குற்றப் பிரிவு காவல் துறையில் இதுகுறித்து புகாா் அளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், அவரது வங்கிக் கணக்கிலிருந்து கடந்த ஏப்ரல் 24 -ஆம் தேதி சிவகங்கை மாவட்டம், படமாத்தூா் பகுதியில் உள்ள ஒரு வங்கிக் கணக்குக்கு ரூ.63 லட்சம் மாற்றப்பட்டது கண்டறியப்பட்டது.

இதைத் தொடா்ந்து, போலீஸாா் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் மதுரையைச் சோ்ந்த தமிழரசன், சேலம் மேட்டூரை சோ்ந்த ஹரிசங்கா், மானாமதுரை தயாபுரத்தைச் சோ்ந்த அய்யனராஜா ஆகிய மூன்று போ் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா் அய்யனராஜாவை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.