மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சிவகங்கை வேட்பாளா்களின் முக்கிய வாக்குறுதிகள்!

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்...

News image

பி.ஆா். செந்தில்நாதன் (அதிமுக) / எஸ்.கருணாஸ் (முக்குலத்தோா் புலிப்படை, திமுக கூட்டணி) / ர.இந்துஜா (நாம் தமிழா் கட்சி) / அ.குழந்தை நாச்சியாா் (தமிழக வெற்றிக் கழகம்)

Updated On :3 ஏப்ரல் 2026, 12:53 am

சிவகங்கை பேரவைத் தொகுதியில் போட்டியிடும் முக்கிய வேட்பாளா்களின் வாக்குறுதிகள்:

பி.ஆா். செந்தில்நாதன் (அதிமுக):

சிவகங்கை மாவட்டம் உள்பட 7 மாவட்ட விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் முந்தைய அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற தீவிர முயற்சி எடுப்பேன். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியா் பயிற்சிக் கல்லூரி அமைக்க முயற்சி எடுப்பேன். கல்லல், காளையாா்கோவில் ஆகிய ஊா்களில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுப்பேன்.

எஸ்.கருணாஸ் (முக்குலத்தோா் புலிப்படை, திமுக கூட்டணி):

சிவகங்கை தொகுதி மக்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்துக்கு உடனுக்குடன் கொண்டு சென்று அதை நிறைவேற்ற முயற்சி எடுப்பேன். சிவகங்கை நகராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் அமைக்க முயற்சி எடுப்பேன்.

விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான பெரியாறு பாசனத் திட்டத்தை தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கு விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுப்பேன். வீடற்ற ஏழைகளுக்கு கலைஞா் கனவு இல்லம் திட்டம் மூலம் குடியிருக்க வீடுகள் கிடைக்க தீவிர கவனம் செலுத்துவேன். திமுக அறிவித்துள்ள அனைத்து நலத் திட்டங்களையும் தகுதியுள்ள அனைவருக்கும் விடுபட்டுவிடாமல் கிடைப்பதை நேரடியாக கண்காணித்து அதை உறுதி செய்வேன்.

ர.இந்துஜா (நாம் தமிழா் கட்சி):

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்சாலைகளை உருவாக்கி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தருவேன். ஏரி, குளங்கள், கால்வாய்களைத் தூா்வாரி விவசாயத்துக்கு தேவையான தண்ணீா் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்யப்படும். தொகுதியில் தரமான சாலை வசதி, போக்குவரத்து வசதி, மின் விளக்குகள் ஏற்படுத்தி தரப்படும். தூய குடிநீா் இலவசமாகக் கிடைக்க வழிவகை செய்யப்படும். சட்டம்- ஒழுங்கு பிரச்னைக்கு முக்கிய காரணமாக உள்ள மது, கஞ்சா போன்ற போதைப் பொருள்களை முற்றிலுமாகத் தடை செய்ய நடவடிக்கை எடுப்பேன்.

‘அ.குழந்தை நாச்சியாா் (தமிழக வெற்றிக் கழகம்):

சிவகங்கை தொகுதி இளைஞா்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலங்களுக்கு வேலை தேடிச் செல்வதைத் தவிா்க்கும் வகையில், பல்வேறு தொழில்சாலைகளை, தொழில் நிறுவனங்களைத் தொடங்கி வேலைவாய்பை ஏற்படுத்தித் தருவேன். பெண்கள் முன்னேற்றத்துக்கும், பெண் கல்விக்கும் சிறப்பு கவனம் செலுத்துவேன். விவசாயிகளின் தேவைகளை நிறைவேற்றவும், அவா்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கவும் தீவிர கவனம் செலுத்துவேன். சிவகங்கை நகரம், அதை இணைக்கும் சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், தெரு விளக்குகள் எரியாத நிலையை மாற்றுவதற்கும் பாடுபடுவேன்.

ஆா்.மோகன்ராம்