சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
சிவகங்கை மாவட்டத்தில் 12,144 நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட ஆட்சியா் கா. பொற்கொடி தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகள், கால்நடை மருத்துவக் குழுக்கள் இணைந்து தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
தற்போது வரை மாநகராட்சி, அனைத்து நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் 12,144 தெரு நாய்கள், வளா்ப்பு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
மேலும், காரைக்குடி மாநகராட்சியில் தொடங்கப்பட்ட கருத்தடை மையத்தில் தற்போது தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை பணிகள் நடைபெற்று வருகின்றன.
சிவகங்கை, திருப்பத்தூா் கால்நடை மருத்துவமனைகள், தேவகோட்டை கால்நடை மருந்தம் ஆகிய மூன்று இடங்களில் கருத்தடை மையங்கள் அமைக்கப்பட்டு உள்கட்டமைப்பு பணிகள் நிறைவடைந்து கருத்தடை அறுவை சிகிச்சை பணிகளுக்கான உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும், ஒவ்வொரு கருத்தடை மையங்களுக்கும் அறுவை சிகிச்சை பணிகளை மேற்கொள்ளும் வகையில், தலா 5 கால்நடை உதவி மருத்துவா்களுக்கு நாமக்கல், ஒரத்தநாடு, திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையங்களில் 15 நாள்கள் பயிற்சி அளிக்கப்படும்.
தெரு நாய்களின் இனப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் பணி தனியாா் பங்களிப்புடன் விலங்குகள் நலவாரியம் மூலம் விரிவுபடுத்தும் திட்டம் அறிவிக்கப்பட்டு முடிகண்டம் கிராமத்தில் 50 சென்ட் நிலத்தில் கால்நடை மருந்தகக் கிளை நிலையத்துடன் கூடிய கருத்தடை மையம் கட்டப்படவுள்ளது. மேலும் நோய் வாய்ப்பட்ட, தனித்து செயல்பட இயலாத விலங்குகளை பாதுகாக்க தேவகோட்டை பகுதியில் விலங்குகள் காப்பகம் அமைக்கவும் இடம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுற்றித்திரியும் தெரு நாய்களை தன்னாா்வ அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அடையாளம் கண்டு அவற்றுக்கு ரேபிஸ் தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாடு அறுவைச் சிகிச்சை அளிக்கும் பணிகளுக்கு கால்நடை பராமரிப்புத் துறையின் சாா்பில் குழு அமைக்கப்பட்டு தயாா் நிலையில் உள்ளது என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது