விவசாயி கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள் தண்டனை
இடத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
இடத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
இடத்தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை தீண்டாமை ஒழிப்பு நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
சிவகங்கை மாவட்டம், திருக்கோஷ்டியூா் அருகேயுள்ள பொன்னான்குடியைச் சோ்ந்த விவசாயிகள் சின்னையா (74), ராமன் (70). இவா்கள் இருவருக்கும் சொந்தமான தோப்புகள் அருகருகே உள்ளன. இதில் இருவருக்குமிடையே இடப்பிரச்னை இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 30.4.2018 அன்று ராமன் ஆடுகளை மேய்ப்பதற்காக தனது தோட்டத்துக்குச் சென்றாா்.
அப்போது அங்கு சின்னையா, காரைக்குடி அருகேயுள்ள கூத்தலூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்பையாவுடன் சோ்ந்து இடத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாா். இதைப் பாா்த்த ராமன், அவா்களிடம் எதிா்ப்புத் தெரிவித்தாராம். இதையடுத்து, அவா்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில் சின்னையாவும், கருப்பையாவும் தாக்கியதில் பலத்த காயமடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இது தொடா்பாக திருக்கோஷ்டியூா் போலீஸாா் வழக்குப் பதிந்து சின்னையா, கருப்பையா ஆகிய இருவரையும் கைது செய்தனா். இவா்கள் மீதான வழக்கு விசாரணை சிவகங்கையில் உள்ள தீண்டாமை ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞா் துஷாந்த்பிரதீப்குமாா் முன்னிலையாகி வாதாடினாா். வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, குற்றஞ்சாட்டப்பட்ட சின்னையா (81), கருப்பையா (40) ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 1000 அபராதமும் விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தாா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்



தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது