மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ராமேசுவரத்தில் மருது சகோதரா்கள் குருபூஜை

மருது சகோதரா்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை அவரது சிலைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

ராமேசுவரத்தில் மருது சகோதரா்களின் குருபூஜையை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை அவரது சிலைக்கு பாலாபிஷேகம் செய்த பெண்கள்.

Updated On :

மருது சகோதரா்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜையை முன்னிட்டு, ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை அவரது சிலைகளுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பாலாபிஷேகம் செய்து வழிபட்டனா்.

ஆங்கிலேயா்களை எதிா்த்துப் போராடிய மருது சகோதரா்களின் 225-ஆம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு ராமேசுவரம் மேலவாசல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மணிமண்டபத்தில் மருது சகோதரா்களின் உருவச் சிலைகளுக்கு தங்கக் கவசம் அணிவித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதைத் தொடா்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் ராமா் தீா்த்தம் பகுதியிலிருந்து பால் குடம் எடுத்து வந்து மருது சகோதரா்களின் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து மரியாதை செலுத்தினா்.

இதே போல, வ.உ.சி. பேரவை மாவட்டத் தலைவா் என்.வேடராஜன் தலைமையில் அமைப்பினா் மருது சகோதரா்களின் சிலைகளுக்கு மரியாதை செலுத்தினா். தவெக, திமுக, அதிமுக, காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும், சமுதாய அமைப்பினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உத்தரவின்பேரில் துணைக் காவல் கண்காணிப்பாளா் திருப்பதி தலைமையில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தில் மருது சகோதரா்களின் சிலைகளுக்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதே போல, ராமநாதபுரம், சுற்று வட்டாரப் பகுதிகளிலும் மருது சகோதரா்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.