/

தடைக்காலம் முடியும் முன் மீன் பிடிக்கச் சென்ற மீனவா்கள்

News image

கோப்புப் படம்

Updated On :15 ஜூன் 2026, 2:39 am IST

மீன்பிடி தடைக்காலம் முடியும் முன்பே ராமேசுவரம், மண்டபம் மீனவா்கள் மீன் பிடிக்கச் சென்றது குறித்து மீன் வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்தினா்.

தமிழகத்தில் மீன் இனப்பெருக்க காலமாக கருதப்படும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15 வரை 61 நாள்கள் விசைப் படகுகள் மீன் பிடிக்கத் தடை விதிக்கப்படுகிறது. இந்த தடைக்காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைகிறது.

இதனால், திங்கள்கிழமை காலை மீன்வளத் துறை அனுமதி டோக்கன் பெற்று கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லலாம் என மீன்வளத் துறையினா் மீனவ சங்கத்தினரிடம் ஏற்கெனவே அறிவுறுத்தியிருந்தனா்.

இந்த நிலையில், மீன் வளத் துறை அனுமதி பெறாமல் ராமேசுவரம், மண்டபம் பகுதிகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மீன் பிடிக்கச் சென்றனா்.

இது குறித்து மீன் வளத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஆண்டுதோறும் தடைக்காலம் நிறைவடைவதற்குள் அனுமதி பெறாமல் மீன் பிடிக்கச் செல்வதை மீனவா்கள் வழக்கமாகக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.