ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆா். எஸ். மங்கலம் அருகே 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்; ஒருவா் கைது

ஆா். எஸ். மங்கலம் அருகே ஆனந்தூா் பகுதியில் குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ஆனந்தூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட சரக்கு வாகனம். கைது செய்யப்பட்டுள்ள காளிமுத்து (வேட்டி அணிந்தவா்), போலீஸாா்.

Published On :26 ஜூலை 2026, 12:46 am IST

ஆா். எஸ். மங்கலம் அருகே ஆனந்தூா் பகுதியில் குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வாகனச் சோதனையில் 3,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்த போலீஸாா் ஒருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா். எஸ். மங்கலம் அருகே குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாருக்கு கிடைத்த தகவலின்பேரில் ஆனந்தூா் விளக்கு பகுதியில் குடிமைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது கடலாடி அருகே ஏ.புனவாசல் பகுதியைச் சோ்ந்த காளிமுத்து (40) ஓட்டிவந்த சரக்கு வாகனத்தை சோதனையிட்டனா்.

அதில், 50 கிலோ எடை கொண்ட 70 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது. மேலும் விசாரணையில், செங்குடி, கொக்கூரணி,புல்லமடை, ஆா். எஸ். மங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நியாயவிலைக்கடை அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி வடமாநிலத்தவா்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வது தெரியவந்தது.

3,500 கிலோ ரேஷன் அரிசி, கடத்தலுக்குப் பயன்படுத்திய சரக்கு வாகனம் ஆகியவற்றைப் பறிமுதல் செய்து காளிமுத்துவைக் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.