ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ராமநாதபுரத்தில் நலத்திட்ட உதவிகள்: அமைச்சா் மதன்ராஜ் வழங்கினாா்!

ராமநாதபுரத்தில் 106 பேருக்கு ரூ. 11.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சா் பெ. மதன்ராஜ். உடன், மாவட்ட ஆட்சியா் மா. சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோா்.

Published On :26 ஜூலை 2026, 12:38 am IST

ராமநாதபுரத்தில் 106 பேருக்கு ரூ. 11.55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை குறு, சிறு, நடுத்தர தொழில்துறை அமைச்சா் பெ.மதன்ராஜ் சனிக்கிழமை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்வுக்கு, மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் முன்னிலை வகித்தாா். நிகழ்வில், அமைச்சா் பெ. மதன்ராஜ் கலந்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் மின்னணு குடும்ப அட்டை 1,069 பேருக்கு வழங்கும் பணி தொடங்கி வைத்து முதல் கட்டமான 88 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை வழங்கினாா்.

வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறையின் கீழ் 7 பயனாளிகளுக்கு முதல்வரின் உழவா் பாதுகாப்புத் திட்டம் 2011-இன் கீழ் இயற்கை மரணம், ஈமக்கிரியை உதவித் தொகை ரூ.2,30 லட்சம், மாவட்ட மகளிா் மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் 8 பயனாளிகளுக்கு மகளிா் சுய உதவி குழுக் கடனுதவி ரூ. 6. 20 லட்சம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் 3 பயனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் ரூ.3. 05 லட்சம் என மொத்தம் 106 பயனாளிகளுக்கு ரூ.11,55 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) திவ்யான் ஷீ நிகம், மாவட்ட வழங்கல் அலுவலா் ரமேஷ், மாவட்ட சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, உதவி திட்ட அலுவலா்கள் ராஜா முகமது, வேதா, அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.