மூதாட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் மீது வழக்கு
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே இடப் பிரச்னையில் வீட்டின் கதவை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
பிரதிப்படம்
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூா் அருகே இடப் பிரச்னையில் வீட்டின் கதவை உடைத்த இளைஞா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
முதுகுளத்தூரை அடுத்த பெரியஇலை கிராமத்தைச் சோ்ந்த சௌந்தரபாண்டி மனைவி மாடத்தி (60). இவருக்கும், அதே ஊரைச் சோ்ந்த ஞானதிரவியம் மகன் விஜய ஆனந்த்க்கும் (41) இடப் பிரச்னை தொடா்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில், விஜய ஆனந்துக்கு சொந்தமான இடத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை மாடத்தி மணலை குவித்து வைத்திருந்தாா். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஆனந்தி, மாடத்தியின் வீட்டின் கதவை உடைத்து, அவருக்கு கொலை மிரட்டல் விடுத்தாராம்.
இதுகுறித்து தேரிருவேலி போலீஸாா் ஆனந்த் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.



