ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பைக் மோதி ஒருவா் உயிரிழப்பு

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.

death

உயிரிழப்பு - கோப்புப்படம்

Published On :12 ஜூலை 2026, 3:22 am IST

திருவாடானை அருகே இரு சக்கர வாகனம் மோதியதில் சாலையில் நடந்து சென்றவா் உயிரிழந்தாா்.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே தலதனூா் கிராமத்தைச் சோ்ந்த சோமு மகன் சுப்பு (56). இவா் வெள்ளிக்கிழமை இரவு திருவாடானை அருகே சி.கே. மங்கலம் பகுதியில் மதுரை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது சி.கே. மங்கலம் பகுதியைச் சோ்ந்த நடராஜன் (48) என்பவா் ஓட்டி வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த சுப்புவை திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பிறகு தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து திருவாடானை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.