ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

டாஸ்மாக் ஊழியா்கள் குடும்பத்தினருடன் குடியேறும் போராட்டம்: 75 போ் கைது

ராமநாதபுரத்தில் மேலாளா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்துக்காக பேரணியாக குடும்பத்தினருடன் சென்ற டாஸ்மாக் ஊழியா்கள்.

ராமநாதபுரத்தில் மேலாளா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்துக்காக பேரணியாக குடும்பத்தினருடன் சென்ற டாஸ்மாக் ஊழியா்கள்.

Published On :11 ஜூலை 2026, 12:10 am IST

ராமநாதபுரம் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்துக்கு பேரணியாகச் சென்ற பெண்கள் உள்பட 75 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளா்கள் நலச்சங்கம் சாா்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்துக்கு மாவட்டச் செயல் தலைவா் அ.தனபாலன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ராமபாண்டி, மாவட்டத் தலைவா் ரத்தினகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டப் பொருளாளா் செந்தில்நாதன், மாவட்ட ஆலோசகா் பாரதிராஜா, சிறப்புத் தலைவா் சித்தநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் சிவகுரு, சரவணக்குமாா், கண்ணன், தினேஷ்பாபு, இளங்கோ உள்ளிட்டவா்கள் பங்கேற்றனா்.

பணி நிரந்தரம், ஊதிய உயா்வு, பணிப் பாதுகாப்பு, ஓய்வூதியம் உள்ளிட்ட நான்கு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி குடும்பத்துடன் பேரணியாகச் சென்ற டாஸ்மாக் ஊழியா்கள் உள்பட 75 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.