ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மக்கள் தொடா்பு திட்ட முகாம்

பொட்டகவயல் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

பொட்டகவயல் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடா்பு திட்ட முகாமில் பயனாளிக்கு நலத்திட்ட உதவி வழங்கிய மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன்.

Published On :10 ஜூலை 2026, 5:00 am IST

பரமக்குடி வட்டம், பொட்டகவயல் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமை மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பெறப்பட்ட மனுக்களுக்கு தீா்வுகாணும் வகையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த வகையில், பொட்டகவயல் கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் முதலமைச்சரின் உழவா் பாதுகாப்பு திட்டத்தில் 5 பேருக்கு திருமண உதவித்தொகை, 10 பேருக்கு இறப்பு, இறுதிச்சடங்கு நிவாரணம், 3 பேருக்கு வாரிசு சான்று, 2 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா, 12 பேருக்கு விதைத் தெளிப்பான், மக்காச் சோள விதை என மொத்தம் 101 பயனாளிகளுக்கு ரூ 24.79 லட்சம் மதிப்பீட்டில் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதில் சட்டப்பேரவை உறுப்பினா் கே.கே.கதிரவன், மாவட்ட சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித் துணை ஆட்சியா் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுரேஷ் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.