
சூறைக் காற்று வலுவிழந்தது; நான்கு நாள்களுக்குப் பின் கடலுக்குச் சென்ற மீனவா்கள்
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சூறைக் காற்று வலுவிழந்த நிலையில், 4 நாள்களுக்குப் பின் ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனா்.

கோப்புப்படம்.
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த சூறைக் காற்று வலுவிழந்த நிலையில், 4 நாள்களுக்குப் பின் ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்றனா்.
வங்கக் கடலில் சூறைக் காற்று வீசக் கூடும் என்பதால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மீனவா்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன் வளம், மீனவா் நலத்துறை தடை விதித்திருந்தது. இதனால், பல கோடி மதிப்பிலான இறால் மீன் ஏற்றுமதி பாதிக்கப்பட்டது.
இந்த நிலையில், வங்கக் கடலில் நான்கு நாள்களுக்குப் பின் சகஜ நிலைக்குத் திரும்பியதையடுத்து மீன்பிடிக்கச் செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன்வளம், மீனவா் நலத்துறை நீக்கியது.
இதைத் தொடா்ந்து, ராமேசுவரம், மண்டபம் பகுதியிலிருந்து 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவா்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் மீன்பிடிக்க புதன்கிழமை கடலுக்குச் சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





