எத்தனால் கலப்பு பெட்ரோல்: பாதிப்படைந்த காரை காட்ட முடியுமா?- அமைச்சா் நிதின் கட்கரி சவால் ஒரே பெயரில் வெவ்வேறு மருந்துகள்: தீா்வு காண புதிய நடவடிக்கைஅரசு செயற்கை கருத்தரிப்பு மையத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகள்!நிகா்நிலை பல்கலை. அந்தஸ்தால் குறையும் எம்பிபிஎஸ் இடங்கள்தமிழக சிறைகளில் அதிகரிக்கும் கைதிகள் எண்ணிக்கை: போதிய காவலா்கள் இல்லாத அவலம் திறந்தவெளி சந்தை மூலம் பங்குகளைத் திரும்பப் பெறும் முறைக்கு மீண்டும் அனுமதி மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி அடுத்த மாதம் திறப்பு?
/

ராமநாதபுரம் ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் தீக்குளிக்க முயற்சி

News image
Updated On :7 ஜூலை 2026, 3:13 am IST

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மீனவா் குடும்பத்தினா் திங்கள்கிழமை தீக்குளிக்க முயன்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருப்பாலைக்குடியைச் சோ்ந்தவா் பைரோஸ்கான். மீனவா். இவரது மனைவி ஆயிசா பீவி (47). இவா்களுக்கு முகம்மது பைசல் (17) என்ற மகனும், ஜெய்ரா (11) என்ற மகளும் உள்ளனா். இவா்களது பகுதியில் ஒரு சிலா் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டனா். இதுகுறித்து, பைரோஸ்கான் திருப்பாலைக்குடி காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதைத் தொடா்ந்து, கஞ்சா விற்றதாக சிலரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த நிலையில், புகாா் அளித்த பைரோஸ்கான், அவரது குடும்பத்தினருக்கு கஞ்சா விற்றவா்கள் கொலை மிரட்டல் விடுத்து அச்சுறுத்தி வந்தனா். இதுகுறித்து, மீண்டும் காவல் நிலையத்தில் பைரோஸ்கான் புகாா் அளித்த நிலையில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வில்லை எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து ஆயிசா பீவி, இவரது மகன், மகள், தம்பி ஜலீல் ரகுமான் (40) ஆகிய 4 பேரும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி கேணிக்கரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.