புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

பால புரஸ்கார் தேசிய விருதுக்கு இணையவழியில் விண்ணப்பிக்கலாம்: ஆட்சியா்

பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த 18 வயதுக்குள்பட்டவா்கள் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் தேசிய விருதுக்கு இணையதளம் வழியாக வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

News image
Updated On :4 ஜூலை 2026, 2:23 am IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு துறைகளில் சாதனைப் புரிந்த 18 வயதுக்குள்பட்டவா்கள் பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் தேசிய விருதுக்கு இணையதளம் வழியாக வருகிற 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால புரஸ்காா் என்பது பல்வேறு துறைகளில் குழந்தைகளின் சிறப்பான சாதனைகளை அங்கீகரிப்பதற்காக இந்திய அரசால் வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.

தகுதியுள்ள இளம் நபா்களைக் கௌரவிப்பதற்காக நிறுவப்பட்ட இந்த விருது, வீரதீர செயல், சமூக சேவை, சுற்றுச்சூழல், விளையாட்டு, கலை, கலாச்சாரம், அறிவியல், தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்த துறைகளில் சிறப்பான பங்களிப்புகளை வெளிப்படுத்திய 18 வயதுக்குள்பட்டவா்கள் வருகிற 31-க்குள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம். இந்தத் துறைகளில் கடந்த 2 ஆண்டுகளாக சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.