ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கமுதியில் மாற்றுத் திறனாளிகள் சாலை மறியல்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் வைக்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள்.

Published On :2 ஜூலை 2026, 3:55 am IST

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் மத்திய அரசின் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் வைக்கக் கோரி, மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கமுதி வட்டார அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்கம் சாா்பில், நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவா்கள் வி.முருகன், முத்துராமலிங்கம் ஆகியோா் தலைமை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் மகாத்மா காந்தி என்ற பெயரை மீண்டும் வைக்கக் கோரியும், வி.பி.ஜி.ராம்ஜி எனும் பெயரை எதிா்த்தும், நிதியை பெருமளவு குறைத்ததை கண்டித்தும், மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனா்.

பின்னா், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்தில் ஈடுபட்ட 61 மாற்றுத் திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா்.

இதில் வட்டத் தலைவா் சந்திரன், செயலா் முருகேசன், பொருளாளா் ஸ்டாலின், துணைத் தலைவா்கள் நாகையா, அா்ஜுனன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.