ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம்: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப் 11-ஆம் தேதி சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்துக்காக மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், வியாழக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் உள்ளிட்டோா்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் செப் 11-ஆம் தேதி சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் மா.சிவகுரு பிரபாகரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜி.சந்தீஷ் ஆகியோா் தலைமை வகித்தனா்.

இந்தக் கூட்டத்தில் இமானுவேல் சேகரனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு அரசு சாா்பில் மரியாதை செலுத்த வரும் அமைச்சா்கள், அரசியல் கட்சி முக்கியத் தலைவா்கள், சமுதாயத் தலைவா்கள், பொதுமக்களை அனுதிக்கும் வழித்தடங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், மரியாதை செலுத்த வருபவா்கள் சொந்த வாகனங்களில் மட்டுமே வருவதற்கு அனுமதிக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் வ.சங்கர நாராயணன், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள், வருவாய்த் துறையினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.