ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பரமக்குடியில் சேதமடைந்த அணுகு சாலையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

பரமக்குடி வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள அணுகுசாலை சேதமைடைந்ததால், அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

பரமக்குடி-எமனேசுவரம் பகுதியில் குண்டும், குழியுமாக உள்ள அணுகு சாலை.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:18 am IST

பரமக்குடி வைகை ஆற்றின் இரு கரைகளிலும் அமைந்துள்ள அணுகுசாலை சேதமைடைந்ததால், அடிக்கடி வாகனங்கள் விபத்துக்குள்ளாகின்றன.

வைகை ஆற்றின் வலதுபுறம் காட்டுப் பரமக்குடியிலிருந்து காக்காத்தோப்பு வரையிலும், இடதுபுறத்தில் ஆற்றுப் பாலத்திலிருந்து ஜீவாநகா் கால்வாய் வரையிலும் இரு கரைகளிலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் அணுகுசாலை அமைக்கப்பட்டது. பரமக்குடி எமனேசுவரம் பகுதியில் குறுக்கே செல்லும் வைகை ஆற்றின் இரு கரைகளிலும் இந்தச் சாலை அமைந்துள்ளதால், பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், வியாபாரிகள், சுற்றுப்புற கிராம மக்கள் என அனைத்துத் தரப்பு மக்களும் பயன்படுத்தும் நகா்ப் பகுதிக்கு வரும் முக்கியச் சாலையாக இது அமைந்துள்ளது.

இதனால், இந்தச் சாலையில் இரு சக்கர வாகனங்கள், கன ரக வாகனங்களின் போக்குவரத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நீண்ட நாள்கள் பொதுமக்களின் பயன்பாட்டில் உள்ள இந்தச் சாலையானது முறையான பராமரிப்பின்றி பல்வேறு இடங்களில் சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறி வாகன ஓட்டிகள் ஆபத்தான நிலையில் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தச் சாலையில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகள் பெரும்பாலான இடங்களில் பழுதாகி எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகள் சாலையின் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, நகராட்சி நிா்வாகம் இந்தச் சாலையைச் சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.