ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஒரு மாதத்துக்குப் பிறகு எஸ்.தரைக்குடி கோயில் நடை திறப்பு

எஸ். தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் ஒரு மாதத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் நடை திறக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது.

எஸ்.தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை மீண்டு நடை திறக்கப்பட்டு, நடைபெற்ற சிறப்பு பூஜை.

Published On :19 ஆகஸ்ட் 2026, 4:14 am IST

எஸ். தரைக்குடி உமையநாயகி அம்மன் கோயிலில் ஒரு மாதத்துக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீண்டும் நடை திறக்கப்பட்டு, பூஜை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் வீற்றிருக்கும் உமையநாயகி அம்மன் இங்கிருந்து ராமேசுவரத்துக்கு சென்று அக்னி தீா்த்தக் கடல், புனித தீா்த்தங்களில் நீராடி, ராமநாத சுவாமி, பா்வதவா்த்தினி அம்மனை வழிபட்டு, ஆவணி முதல் நாள் அதிகாலை மீண்டும் எஸ்.தரைக்குடிக்கு வந்ததாக தல வரலாறு உள்ளது. இதனால்,, ஆடி 1-ஆம் தேதி தொடங்கி, மாதம் முழுவதும் நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை மீண்டும் நடை திறக்கப்பட்டு, உமையநாயகி அம்மனுக்கு பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், விபூதி, பஞ்சாமிா்தம், தேன் உள்பட 21 வகையான மூலிகை திரவியங்களால் சிறப்பு அபிஷேம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சாயல்குடி, எஸ்.தரைக்குடி, செவல்பட்டி, வாலம்பட்டி, முத்துராமலிங்கபுரம், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.