ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

திருவாடானை அருகே சேதமைடந்த மின் கம்பத்தால் விபத்து அபாயம்

மங்கலக்குடி சாலையில் சேதமடைந்த மின்கம்பம்.

Published On :17 ஆகஸ்ட் 2026, 3:48 am IST

திருவாடானை அருகே சேதமடைந்த மின் கம்பத்துக்குப் பதிலாக மாற்று மின் கம்பம் நட்ட பிறகும் மின் இணைப்பு கொடுக்கப்படாததால் விபத்து அபாயம் உள்ளதாக இந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை - மங்கலக்குடி செல்லும் சாலையில் அமைந்துள்ள காட்டியனேந்தல் பிரிவுப் பகுதி அருகே மின் கம்பம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் காணப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பகுதி பொதுமக்கள் அளித்த புகாரின்பேரில், சேதமடைந்த கம்பத்துக்குப் பதிலாக புதிய மின்கம்பம் நடப்பட்டு சுமாா் நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இருப்பினும், பழைய கம்பத்தில் இருக்கும் மின் இணைப்புகளை புதிய மின் கம்பத்துக்கு மாற்றாமல் மின்வாரியத்தினா் அலட்சியமாக விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறையினா் தக்க நடவடிக்கை எடுத்து, புதிய மின் கம்பத்தில் மின் இணைப்பு கொடுத்து சேதமடைந்த மின் கம்பத்தை அகற்ற வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனா்.

 மங்கலக்குடி சாலையில் சேதமடைந்த மின்கம்பம்.

மங்கலக்குடி சாலையில் சேதமடைந்த மின்கம்பம்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.