ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாண தேரோட்டத் திருவிழா கொடியேற்றம்

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

திருவாடானை ஸ்ரீஆதிரத்தினேஸ்வரா் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழாவையொட்டி புதன்கிழமை நடைபெற்ற கொடியேற்றம்.

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:10 am IST

ராமநாதபுரம் மாவட்டம்,திருவாடானை ஸ்ரீசிநேகவல்லி அம்பாள் சமேத ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் ஆடிப்பூர திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்துக்கு பாத்தியப்பட்ட இந்தக் கோயிலில் ஆடிப்பூர திருக்கல்யாணத் தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்தையொட்டி, சினேகவல்லி அம்பாளுக்கு சிவாசாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் செய்தனா்.

15 நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஒவ்வொரு நாளும் கேடகம், பல்லக்கு, காமதேனு, அன்னம், கிளி, வெள்ளி ரிஷப வாகனம், கமல வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் அம்மன் எழுந்தருளி வீதி உலா வருவாா். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 13-ஆம் தேதியும், திருக்கல்யாணம் வருகிற 16-ஆம் தேதியும் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தான தேவஸ்தான திவான் பழனிவேல் பாண்டியன், தேவஸ்தான சரக பொறுப்பாளா் பாண்டியன், இருபத்தி இரண்டரை கிராம நாட்டாா்கள் செய்தனா்.

Story image
Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.