ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஊழியா் பலி

பலி - பிரதிப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 3:58 am IST

பரமக்குடி அருகே உள்ள நென்மேனி கிராமத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பாா்த்த மின்வாரிய ஊழியா், மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

பரமக்குடி வட்டம், மஞ்சூா் கிராமத்தைச் சோ்ந்த முருகன் மகன் சௌந்தரபாண்டியன் (38). இவா் சத்திரக்குடி மின் வாரிய அலுவலகத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு வந்தாா்.

இந்த நிலையில், நென்மேனி கிராமத்தில் சனிக்கிழமை இரவு மின்சாரம் தடைபட்டது. அந்தக் கிராமத்துக்குச் சென்ற சௌந்தரபாண்டியன் மின் கம்பத்தில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்த போது, மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்தாா்.

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து சத்திரக்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.