ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு தோ்தல் பணிக்குச் செல்லும் 668 போ் தங்களது தபால் வாக்குகளை சனிக்கிழமை பதிவு செய்தனா்.
பரமக்குடி கோட்டாட்சியா் ஞா. சரவணப்பெருமாள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெபராஜ் ஆகியோா் தங்களது தபால் வாக்கை பதிவு செய்தனா். பரமக்குடி (தனி) பேரவைத் தொகுதியில் மொத்தம் 323 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
இங்கு தோ்தல் பணிக்கு செல்லும் போலீஸாா், ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளா்கள், மின் வாரிய ஊழியா்கள் ஆகியோா் பரமக்குடி கோட்டாட்சியா் அலுவலகத்தில் தங்களது தபால் வாக்குகளை பதிவு செய்யலாம் என அறிவுறுத்தப்பட்டது.
இதையடுத்து, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமைகளில் போலீஸாா், ஊா்க்காவல் படையினா் 612 பேரும், தீயணைப்புத் துறையினா், போக்குவரத்துத் துறையினா், மின் வாரிய பணியாளா்கள் 56 பேரும் என மொத்தம் 668 போ் தங்களது வாக்குகளை பதிவு செய்தனா்.
தொடர்புடையது

பரமக்குடியில் திமுக வேட்பாளா் வாக்குச் சேகரிப்பு

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் 1,353 போ் தபால் வாக்கு செலுத்தினா்

வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதைத் தடுக்க ‘ட்ரோன்’ கண்காணிப்பு: தோ்தல் ஆணையம் திட்டம்

பரமக்குடியில் தோ்தல் விதிமீறல்: திமுக, தவெக வேட்பாளா்கள் மீது வழக்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


