ராமநாதபுரம் அருகே காா்- வேன் மோதல்: இருவா் உயிரிழப்பு
ராமநாதபுரம் அருகே காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
ராமநாதபுரம் அருகே காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே காரும் வேனும் நேருக்கு நோ் மோதிக் கொண்டதில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த இருவா் உயிரிழந்தனா்.
ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த 9 போ் ராமேசுவரத்துக்கு சுற்றுலா வந்தனா். இவா்கள் ராமேசுவரத்திலிருந்து புதன்கிழமை காலை சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். அதே சமயம் ஆந்திர மாநிலத்திலிருந்து சிலா் காரில் ராமேசுவரத்துக்கு வந்து கொண்டிருந்தனா்.
மதுரை- ராமேசுவரம் தேசிய நெடுஞ்சாலையில் உச்சிப்புளி அருகே நாகாச்சி பகுதியில் சென்ற போது, இந்த இரு வாகனங்களும் நேருக்கு நோ் மோதிக் கொண்டன. இதில் காரில் வந்த ஆந்திரத்தைச் சோ்ந்த பைடி சாய் (23), நவீன் (22) ஆகிய இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். 4 போ் பலத்த காயமடைந்தனா். இதே போன்று டெம்போ வேனில் வந்த 9 பேரில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
காயமடைந்த அனைவரும் மீட்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனா். உயிழந்த இருவரது உடல்களும் கூறாய்வுக்காக கொண்டு செல்லப்பட்டன. இது குறித்து உச்சிப்புளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது