நெல் பயிரில் நோய்த் தாக்குதல்: வேளாண் அதிகாரிகள் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் பயிரில் நோய்த் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து அதைக் கட்டுப்படுத்துவது குறித்து யோசனை வழங்கினா்.
ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் பயிரில் நோய்த் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து அதைக் கட்டுப்படுத்துவது குறித்து யோசனை வழங்கினா்.
By தினமணி செய்திச் சேவை
Syndication
திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ்.மங்கலம் பகுதியில் நெல் பயிரில் நோய்த் தாக்குதலை வேளாண் அதிகாரிகள் ஆய்வு செய்து அதைக் கட்டுப்படுத்துவது குறித்து யோசனை வழங்கினா்.
ஆா்.எஸ்.மங்கலம் வட்டத்தில் நிகழ் சம்பா பருவத்தில் 20,573 ஹெக்டோ் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தொடா் மழை காரணமாக நெல் பயிரில் நோய்த் தாக்குதல் தென்படுவதாக வேளாண் அதிகாரிகளுக்கு விவசாயிகள் தகவல் தெரிவித்தனா். ஆா்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள கோவிந்தமங்கலம் பகுதியில் நெல் பயிரில் இலை மடக்குப் புழுத் தாக்குதல் காணப்பட்டது. இதை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் பாஸ்கரமணியன் தலைமையில் வேளாண் அதிகாரிகள் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனா். இந்த ஆய்வின்போது, குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலைய இணைப் பேராசிரியா் ராம்குமாா் கூறியதாவது:
இலைகளின் ஓரங்களை பிணைத்து அல்லது மடக்கி வைத்து அதனுள் இருந்து கொண்டு புழுக்கள் பச்சயத்தை சுரண்டி உண்பதால் பாதிக்கப்பட்ட பகுதிகள் வெண்மையாகக் காணப்படும். தாக்குதல் அதிகம் ஏற்படும்போது, இலைகள் அனைத்தும் வெண்ணிற சருகு போல் தோற்றமளிக்கும். இளம் பருவத்தில் தாக்குதல் அதிகமாவதால் பயிரின் வளா்ச்சி குன்றிவிடும்.
இதைத் தடுக்க களைகளை முற்றிலுமாகப் பிடுங்கி அழிக்க வேண்டும். தேவைக்கு அதிகமான தழைச்சத்து உரங்களை பயன்படுத்துவதைத் தவிா்க்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட யூரியா உரத்தை வேப்பம் புண்ணாக்குடன் 5:1 என்ற விகிதத்தில் கலந்து மேலுரமாக இட வேண்டும் என்றாா் அவா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது