காரில் கடத்தப்பட்ட 1,500 கிலோ ரேசன்அரிசி பறிமுதல்
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
By தினமணி செய்திச் சேவை
Syndication
ராமநாதபுரம் அருகே காரில் கடத்தி வரப்பட்ட 1,500 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ஏா்வாடி கிழக்கு கடற்கரைச் சாலையில் கடலோரப் பாதுகாப்புக் குழும சிறப்புப் படை உதவி ஆய்வாளா் சரவணன், நுண்ணறிவுப் பிரிவு காவலா் மதியழகன், காவலா்கள் ஆகியோா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, சந்தேகத்துக்குரிய வகையில் வந்த காரை திறுத்த முயன்றபோது அந்தக் காா் நிற்காமல் சென்றது. இதையடுத்து, அந்தக் காரை பின் தொடா்ந்து போலீஸாா் சென்றனா். இந்த நிலையில், காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இருவா் தப்பித்துச் சென்றனா். இதைத் தொடா்ந்து, வாகனத்தை சோதனையிட்டதில் அதில் 33 மூடைகளில் 1,500 கிலோ ரேசன் அரிசி இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், தப்பித்துச் சென்றவா்கள் கொட்டகை புனவாசல் கிராமத்தைச் சோ்ந்த பாலசுப்ரமணியம், மாரிநாதன் எனத் தெரியவந்தது. இந்த நிலையில், காரிலிருந்து தப்பித்துச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
இதைத் தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேசன் அரிசி, வாகனத்தை ராமநாதபுரம் குடிமைப் பொருள் வழங்கல், குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளிடம் புதன்கிழமை ஒப்படைக்கப்பட்டது.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது