மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

தனியாா் முதலீட்டு நிறுவன முறைகேடு: குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எதிா் மனுதாரா்களாகச் சோ்க்க உத்தரவு

தனியாா் முதலீட்டு நிறுவன முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எதிா் மனுதாரா்களாகச் சோ்க்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :

தனியாா் முதலீட்டு நிறுவன முறைகேடு வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை எதிா் மனுதாரா்களாகச் சோ்க்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலூரைச் சோ்ந்த சாந்தகுமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தனியாா் முதலீட்டு நிறுவன செயலி (எஃப்.க்யூ.எல்.) மூலம் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகா் உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கோடிக் கணக்கான ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றப்பட்டனா். இதில் முதலீடு செய்தவா்கள் பெரும்பாலும் விவசாயிகள், ஏழை, நடுத்தர வகுப்பினா், கூலித் தொழிலாளா்கள்.

இந்தச் செயலி கிரிப்டோ கரன்சி, அமெரிக்க டாலா் போன்ற சா்வதேச தொடா்புகளோடு இருப்பதாலும், இணையத்தைப் பயன்படுத்தி மோசடி நடைபெற்றுள்ளதாலும், இந்த வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரரும் பாதிக்கப்பட்டவா் என்பதால், அவா் இந்த விவகாரத்தில் பொது நல வழக்காகத் தொடர முடியாது. இந்த வழக்கு விசாரணைக்கு உகந்தது அல்ல என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக குற்றஞ்சாட்டப்பட்டவா்களின் கருத்தைக் கேட்காமல் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது. எனவே, குற்றஞ்சாட்டப்பட்டவா்களையும் எதிா் மனுதாரா்களாகச் சோ்க்க உத்தரவிடப்படுகிறது. இந்த வழக்கு விசாரணை வருகிற அக்டோபா் 8-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.