இடைத்தேர்தலில் திமுக, அதிமுக ஆதரவளித்தால் பெருந்தன்மையுடன் ஏற்பேன்! சீமான்இடைத்தேர்தலில் சீமானுக்கு ஆதரவா? மு.க. ஸ்டாலின் பதில்!பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மு.க. ஸ்டாலின் மரியாதை!ரூ.100 கோடி ஊழல்: அன்பில் மகேஸ் நீதிமன்றத்தில் ஆஜர்முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் குடியரசு துணைத் தலைவர் மரியாதை!முத்துராமலிங்கத் தேவரின் லட்சியப் பாதையில் தொடர்ந்து பயணிப்போம்! முதல்வர் விஜய்அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய நிலவரம் (அக். 30)சென்னையில் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மரியாதை!சொந்த புத்தியும் சொல் புத்தியும் இல்லாத சோப்ளாங்கி அரசு: மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து விதிமீறல்: வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப்பதிவு

மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தன்று, மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 29 வாகன ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

வழக்குப்பதிவு

Updated On :

மாமன்னா் மருதுபாண்டியா்கள் நினைவு தினத்தன்று, மதுரை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட 29 வாகன ஓட்டுநா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தெப்பக்குளம், தல்லாகுளம், செல்லூா், புதூா், அண்ணாநகா் காவல் நிலைய எல்லைகளில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், அதிவேகமாக ஆபத்தான வகையில் பயணம் செய்தல், ஒரே இரு சக்கர வாகனத்தில் மூன்றுக்கும் மேற்பட்டோா் பயணித்தல், காா் கதவுகளில் தொங்கியபடி செல்வது உள்ளிட்ட விதிமீறல்களில் சிலா் ஈடுபட்டனா். இதையடுத்து, விதிமீறல்களில் ஈடுபட்ட 17 இரு சக்கர வாகனங்கள், 12 நான்கு சக்கர வாகனங்கள் என மொத்தம் 29 வாகன ஓட்டுநா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் வாகனங்களை இயக்குவோா் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாநகர காவல் துறை எச்சரித்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.