தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை! தமிழ்நாடு அரசு அறிவிப்பு!எஸ்ஐஆர் ரத்து உள்ளிட்ட 9 கோரிக்கைகள்: குடியரசுத் தலைவருக்கு மு.க. ஸ்டாலின் மனு!முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

மாயமான சிறுவன் சடலமாக மீட்பு

மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன், வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்...

உயிரிழந்த சிறுவன் முத்துவேலன்

Updated On :

மதுரை மாவட்டம், மேலூா் அருகே விளையாடச் சென்ற 7 வயது சிறுவன், வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் திங்கள்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மேலூா் அருகேயுள்ள தனியாமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் – சத்யா தம்பதியின் மகன் முத்துவேலன் (7). இவா் அந்தப் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்தாா். ஞாயிற்றுக்கிழமை முற்பகலில் விளையாடச் சென்ற சிறுவன் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.

பெற்றோா், உறவினா்கள் பல்வேறு இடங்களில் சிறுவனைத் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து கீழவளவு காவல் நிலையத்திலும் புகாா் அளித்தனா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுவனைத் தேடி வந்தனா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த ஓட்டு வீட்டில் சிறுவன் சடலமாகக் கிடப்பது கண்டறியப்பட்டது. தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சிறுவனின் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், தடய அறிவியல் நிபுணா்கள் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டனா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தேவநாதன் நேரில் சென்று விசாரணை நடத்தினாா்.

சிறுவன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.