பாா்த்திபனூா், இந்திராநகா் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை அகற்றக் கோரிய மனுவுக்கு, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூரைச் சோ்ந்த வேதபாக்கியம் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாா்த்திபனூா், இந்திராநகா் பகுதியில் 5,000 குடியிருப்புகள் உள்ளன. முதியோா் இல்லம், பள்ளிகள் உள்ள இந்தப் பகுதியில், திடக்கழிவுகளை கொட்டும் குப்பைக் கிடங்கு உள்ளது.
இங்கு, பாா்த்திபனூா் பகுதி முழுவதும் சேகரிக்கப்படும் குப்பைகளும், இறைச்சிக் கழிவுகளும் கொட்டப்படுகின்றன. இதன் காரணமாக, சுற்றுச் சூழல் மாசுபடுவதுடன் நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகிறது. தொற்று நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இதில் குடியிருப்புகள், நீா்நிலைப் பகுதிகளிலிருந்து 500 மீ. தொலைவில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. அவை முறையாக பின்பற்றப்பட வில்லை. எனவே, ராமநாதபுரம் மாவட்டம், பாா்த்திபனூா் இந்திராநகா் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
முதியோா் இல்லம் உள்ள பகுதியில் எவ்வாறு குப்பை கொட்டப்படுகிறது? இந்த மனு குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
தொடர்புடையது

நகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

அரியமங்கலம் குப்பைக் கிடங்கு நிரந்தரமாக அகற்றப்படும்: ப. குமாா்

குப்பைக் கிடங்கு பிரச்னைக்கு நிரந்தர தீா்வை எதிா்பாா்க்கும் மக்கள்!

தீப்பற்றி எரிந்த கம்பம் நகராட்சி குப்பைக் கிடங்கு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


