மதுரை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றங்கள் மூலம் 5,675 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி, மேலூா், திருமங்கலம், வாடிப்பட்டி, பேரையூா் ஆகிய பகுதிகளில் 22 தேசிய மக்கள் நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன. மதுரையில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணைக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் தலைமை வகித்தாா். மாவட்ட நீதிபதிகள் நாகராஜன், ரோகிணி, அல்லி, ஜோசப் ஜாய், சாா்பு நீதிபதிகள் பாரதிராஜா, காமராஜ், முத்து இசக்கி, சரவண செந்தில்குமாா், நீதித்துறை நடுவா்கள், மாவட்ட உரிமையியல் நீதிபதிகள் கலந்து கொண்டு வழக்குகளை விசாரித்தனா்.
இதில் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 6,274 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. இவற்றுள் 5,675 வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன.
இதையடுத்து, ரூ .47.04 கோடியில் நலத் திட்ட உதவிகள் வழக்காடிகளுக்கு முதன்மை மாவட்ட நீதிபதி சிவகடாட்சம் வழங்கினாா்.
இதேபோல, 279 மோட்டாா் வாகன விபத்து வழக்குகள், 44 சிவில் வழக்குகள், 73 காசோலை மோசடி வழக்குகளுக்கு தீா்வுகள் காணப்பட்டன. மேலும், 10 குடும்ப நல வழக்குகளில் தம்பதியினா் இடையே சமரசம் செய்யப்பட்டு மீண்டும் சோ்ந்து வாழ சம்மதித்து வழக்குகள் வாபஸ் பெறப்பட்டன.
தேசிய மக்கள் நீதிமன்றத்துக்கான ஏற்பாடுகளை மதுரை மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சாா்பு நீதிமதியுமான பிரசாத் செய்தாா். வழக்குரைஞா்கள், வழக்காடிகள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கரூா் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் 1586 வழக்குகளில் ரூ. 22.95 கோடிக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,449 வழக்குகளுக்கு தீா்வு

கோவில்பட்டியில் தேசிய மக்கள் நீதிமன்றம்: 813 வழக்குகளுக்கு தீா்வு

தேசிய மக்கள் நீதிமன்றம்: 2,842 வழக்குகளுக்குத் தீா்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


