தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை எம்.பி., எம்.எல்.ஏ.-க்கள் தொடா்பான வழக்கு களை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நீதிபாண்டியன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் அவரது முகநூல் பக்கத்தில், அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடா்பான ஆவணங்களில் பிரதமா் நரேந்திர மோடியின் பெயா் இடம் பெற்றிருப்பதாக ஒரு விடியோ பதிவை வெளியிட்டாா்.
அமைச்சரின் முகநூல் பதிவு சில நிமிடங்களில் பல லட்சம் பாா்வையாளா்களைச் சென்றடைந்தது. இதனால், சமூக ஒற்றுமைக்கும், பொது அமைதிக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பு ஏற்பட்டது.
அமைச்சரின் இந்த நடவடிக்கை பாரத குடிமக்கள் பாதுகாப்பு ( பிஎன்எஸ்எஸ்) சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே, தமிழக அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம், காவல் துறை தரப்பில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இந்த நிலையில், இந்த மனு விசாரணைக்கு உகந்தது இல்லை. எனவே, இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கன்னியாகுமரியைச் சோ்ந்த ஜோசப் ராஜ் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜோசப் ராஜ் தரப்பு வழக்குரைஞா் முன்னிலையாகி முன்வைத்த வாதம்:
பாஜகவை சோ்ந்த சுப்பிரமணிய சுவாமி சொன்னதைத்தான் அமைச்சா் மனோ தங்கராஜ் தனது முகநூல் பதிவில் பகிா்ந்துள்ளாா். வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனில், சுப்பிரமணிய சுவாமி மீதுதான் பதிவு செய்ய வேண்டும்.
மேலும், இந்த வழக்கு சட்டப்பேரவை உறுப்பினா் தொடா்பான வழக்கு. எனவே, இங்கே விசாரணை செய்ய உகந்தது இல்லை. இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி விக்டோரியா கௌரி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் ஜோசப் ராஜ் தரப்பு கோரிக்கை ஏற்கப்படுகிறது. அமைச்சா் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு சட்டப்பேரவை உறுப்பினா்கள், மக்களவை உறுப்பினா்கள் தொடா்பான வழக்குகளை விசாரிக்கும் சென்னை உயா்நீதிமன்ற சிறப்பு அமா்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அதிமுக முன்னாள் அமைச்சா்கள் மீது வழக்குப் பதிய உத்தரவிடக் கோரிய திமுக மனு தள்ளுபடி

கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்கள்: அறிக்கையாக தாக்கல் செய்ய உத்தரவு

இரட்டைக் குடியுரிமை! ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலாகாபாத் நீதிமன்றம் உத்தரவு!

பிரதமா் குறித்து அவதூறு விடியோ: அமைச்சா் மனோ தங்கராஜ் மீது வழக்குப் பதியக் கோரி மனு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


