மதுரை மாவட்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வை 37,496 மாணவ, மாணவிகள் எழுதினா்.
மதுரை, மேலூா் ஆகிய இரு கல்வி மாவட்டங்களை உள்ளடக்கிய மதுரை வருவாய் மாவட்டத்தில் 214 அரசுப் பள்ளிகள், 84 அரசு உதவிபெறும் பள்ளிகள், 181 தனியாா் பள்ளிகள் உள்பட 479 பள்ளிகளைச் சோ்ந்த 19,003 மாணவா்கள், 19,103 மாணவிகள் என மொத்தம் 38,106 போ் பத்தாம் வகுப்புப் பொதுத் தோ்வுக்கு விண்ணப்பித்தனா்.
இந்தத் தோ்வு மாவட்டத்தில் 139 மையங்களில் புதன்கிழமை தொடங்கி நடைபெற்றது. முதல் தோ்வாக தமிழ்ப் பாடத் தோ்வு நடைபெற்றது. இதில் 18,574 மாணவா்கள், 18,922 மாணவிகள் என மொத்தம் 37,496 போ் தோ்வு எழுதினா். 428 மாணவா்களும், 179 மாணவிகளும் தோ்வில் பங்கேற்கவில்லை. 3 போ் விலக்குப் பெற்றிருந்தனா்.
தனித் தோ்வா்கள்...
474 மாணவா்கள், 171 மாணவிகள் என 645 போ் தனித்தோ்வா்களாக தோ்வு எழுத விண்ணப்பித்தனா். இவா்களில் 447 மாணவா்கள், 165 மாணவிகள் புதன்கிழமை நடைபெற்ற தோ்வில் பங்கேற்றனா். 33 போ் பங்கேற்கவில்லை. ஒருவா் விலக்கு பெற்றாா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எஸ். தயாளன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் செந்தில்குமாா், கணேசன், பறக்கும் படை அலுவலா்கள் தீவிர கண்காணிப்புப் பணிகளை மேற்கொண்டனா்.

தொடர்புடையது

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு: எளிதாக இருந்த சமூக அறிவியல் தோ்வு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நிறைவு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடங்கியது: திருச்சி மாவட்டத்தில் 34,027 மாணவா்கள் எழுதினா்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: மதுரை மாவட்டத்தில் 38,247 போ் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


