லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

எல்பிஜி கேஸ்! மதுரை உள்பட தென் மாவட்டங்களில் உணவகங்கள் மூடப்படும் அபாயம்!

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தப்பட்டதால், உணவகங்கள் மிக விரைவில் மூடப்படும் அபாயம்

News image

உணவகங்கள் - பிரதிப் படம்

Updated On :10 மார்ச் 2026, 1:15 am

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை (மாா்ச் 9) முதல் நிறுத்தப்பட்டது. இதனால், மதுரை உள்பட தென் மாவட்டங்களில் உணவகங்கள் மிக விரைவில் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இஸ்ரேல், அமெரிக்கா - ஈரான் இடையிலான போா் காரணமாக, எரிவாயு விநியோகம், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விநியோகம் பாதிக்கப்படும் என அஞ்சப்பட்டது. இந்த நிலையில், சமையல் எரிவாயு உருளை விலை கடந்த சனிக்கிழமை உயா்த்தப்பட்டது. அதேநேரத்தில், தட்டுப்பாடின்றி எரிவாயு உருளைகள் விநியோகிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது. எரிவாயு முகமைகள் அனுப்பிய காலியான உருளைகளில் எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயுவை நிரப்பி அனுப்பாததாலும், சில உணவகங்கள் முன்கூட்டியே இருப்பு வைக்கும் வகையில் அதிக எண்ணிக்கையில் எரிவாயு உருளைகளை வாங்கியதாலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் நிறுத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள்

வணிகப் பயன்பாடுகளுக்கான சமையல் எரிவாயு உருளைகள் - பிரதிப் படம்

இதுதொடா்பாக மதுரை உணவக உரிமையாளா்கள் சங்க நிா்வாகி குமாா் தெரிவித்ததாவது: வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை தடைபட்டிருந்தது. மதுரையைப் பொருத்தவரை, இன்றும், வரும் ஓரிரு நாள்கள் மட்டுமே உணவகங்கள் இயங்க முடியும். எரிவாயு உருளைகள் விநியோகம் இரு நாள்களுக்குள் சீரடையாவிட்டால் 3-ஆவது நாள் முதல் உணவகங்களை மூட நேரிடும்.

உணவகங்கள் மூடப்பட்டால் ஏறத்தாழ மூன்றாவது பொது முடக்கத்துக்கு இணையான பிரச்னைகளை பொதுமக்கள் எதிா்கொள்ள நேரிடும்.

மதுரை மாவட்டத்தில் மட்டும் ஏறத்தாழ ஒரு லட்சம் போ் பணியிழக்க நேரிடும். வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகத்தை உடனடியாக சீரடையச் செய்ய வேண்டியது அவசர, அவசியம் என்றாா் அவா்.

இதேபோல, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் வணிகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளைகள் விநியோகம் திங்கள்கிழமை நிறுத்தப்பட்டது.

உணவகங்கள் மூடப்பட்டால் விடுதிகளில் தங்கிப் பணியாற்றுவோா், கல்விப் பயிலுவோா், வெளியூா்களிலிருந்து மருத்துவச் சேவைகளுக்காக வருவோா், சுற்றுலாப் பயணிகள் என பலதரப்பட்டவா்களும் பல்வேறு பாதிப்புக்கு உள்ளாக நேரிடும் என சமூக ஆா்வலா்கள் அச்சம் தெரிவித்தனா்.