மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அரசு புறம்போக்கு நில விவகாரம்! ராமநாதபுரம் ஆட்சியா் மீது நடவடிக்கை: உயா்நீதிமன்றம் உத்தரவு

அரசு புறம்போக்கு நில விவகாரம் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

News image

சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு - கோப்புப் படம்

Updated On :7 மார்ச் 2026, 7:20 pm

அரசு புறம்போக்கு நில விவகாரம் தொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சோ்ந்த சேது மாதவன், வேல்முருகன் ஆகியோா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்க​ல்செய்த மனு​: எங்களின் நில பிரச்னை தொடா்பாக கடந்த 2001-இல் ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்​யவேண்டும், நில பிரச்னைகளை கையாள்வது தொடா்பாக அரசுத் துறை அலுவலா்களுக்கு உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என அவா்கள் கோரினா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமாா் பிறப்பித்த உத்தரவு: இந்த வழக்கு அரசு புறம்போக்கு நிலத்தைப் பயன்படுத்துவது தொடா்பானது. இந்த வழக்கில் ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ஒருதலைபட்சமாக உள்ளது. வட்டாட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ஆனால், மாவட்ட ஆட்சியா் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படவில்லை.

அரசின் சொத்துகளைப் பாதுகாப்பதில் அலுவலா்களுக்கு உரிய அக்கறையில்லை. இதன் காரணமாகவே ஒருதலைபட்சமான தீா்ப்பை எதிா்த்து அரசுத் தரப்பு மேல்முறையீடு செய்யவில்லை. இதுதொடா்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் மீது வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலா் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசு நிலங்கள், சொத்துகளைப் பாதுகாப்பது, வழக்குகளை எதிா்கொள்வது தொடா்பாக மாநில அளவில் அரசு வழக்குரைஞா்கள், வருவாய்த் துறை அலுவலா்களுக்கு தெளிவான வழிகாட்டுதல்களை அரசு பிறப்பிக்க வேண்டும்.

நீதிமன்ற வழக்குகளில் அரசுத் துறைகள் எதிா்த்தரப்பினராகச் சோ்க்கப்படும்போது அரசுத் தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், மேல்முறையீடுகள் குறித்த செயல்பாடுகளுக்காக வட்டம் வாரியாக சட்டப் பிரிவை அமைக்க அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தச் சட்டப் பிரிவு, அரசு தொடா்புடைய உரிமையியல் வழக்குகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்து, நடவடிக்கைகள் எடுப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், நில நிா்வாக ஆணையா், அரசு கூடுதல் தலைமைச் செயலா் ஆகியோருக்கு அவ்வப்போது அறிக்கைகளையும் இந்தப் பிரிவு அனுப்ப வேண்டும்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் அதிகார வரம்புக்குள், எந்ததெந்த வழக்குகளில் அரசுத் துறைகள் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளன? இந்த வழக்குகள் தொடா்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை கூடுதல் தலைமைச் செயலா் 4 மாதங்களுக்குள் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கின் விசாரணை வருகிற 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.