புணேவில் கனமழையால் இரண்டு இடங்களில் நிலச்சரிவு! ஜம்மு: பெருக்கெடுத்து ஓடும் ஆற்றில் சிக்கிக்கொண்ட 4 சிறுவர்கள் மீட்புசர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம்; சச்சினின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி! தமிழ்நாடு ஆளுநருடன் தில்லி பிரதிநிதி கே. வெங்கட நாராயணா சந்திப்பு! தவெகவில் இணைந்தார் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன்! என்மீது மமதா குற்றம் சாட்டியதால் கட்சியை விட்டு விலகினேன்! சந்திரிமா பட்டாச்சார்யா பாக். கடலோரக் காவல் படை முகாமில் பயங்கரவாதத் தாக்குதல்! 30 வீரர்கள் பலி! குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை!54,000 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய பிரதமர் மோடி! குதிரை பேரம்! முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக்-அவுட் நோட்டீஸ்?
/

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம்: முதல்வருக்கு கோரிக்கை

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம் கிடைக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

News image

முதல்வர் விஜய்.

Updated On :26 ஜூன் 2026, 2:34 am IST

குறு, சிறு, நடுத்தரத் தொழிற்சாலைகளுக்கு விரைந்து மானியம் கிடைக்க முதல்வா் ஜோசப் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்கம் சாா்பில் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் பெரிய தொழிற்சாலைகளுக்கு அடுத்து சிறு, குறு தொழில்கள் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றன. இந்தத் தொழில்களை ஊக்குவிக்கும் விதமாக, அரசு பல்வேறு மானியங்களை வழங்கி வருகிறது. இயந்திரங்கள் மானியம், வட்டி மானியம், இரண்டு ஆண்டுகளுக்கு மின் விநியோக மானியம் ஆகியவை கிடைப்பதில் தாமதமாகிறது.

இந்த நிலையில், புதிதாகத் தொழில் தொடங்கியவா்கள் தங்களது மூலதனத்தைத் தவிர வங்கிகளில் கடன் பெற்றுதான் தொழில் நடத்தி வருகின்றனா்.

இதையடுத்து, பல மாதங்கள் கழித்து மானியத் தொகை கிடைப்பதால் வங்கிகளில் அதிக வட்டி செலுத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

எனவே, மானியத் தொகை உரிய காலத்தில் கிடைப்பதற்கு காலநிா்ணயம் செய்து வழங்கினால், சிறு தொழில்கள் வளா்வதற்கு வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.