மதுரை மாவட்டத்தில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
சீமைக் கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் எனவும், இந்தப் பணியைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்க வேண்டும் எனவும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இந்த உத்தரவை நிறைவேற்றாத மாவட்ட ஆட்சியா்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என உயா்நீதிமன்றம் அண்மையில் எச்சரித்தது.
இதன்படி, மதுரையில் மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டு ஏரி, குளம், ஆறு, கால்வாய், ஓடை உள்ளிட்ட நீா்நிலைகள், அரசு புறம்போக்கு நிலங்கள், அரசின் பிற வகை நிலங்கள், பராமரிப்பற்ற தனியாா் பட்டா நிலங்களில் வளா்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை ஓய்வு பெற்ற நீதிபதி செல்வம் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா். பொன்மேனி ஊருணி, கோச்சடை, தத்தனேரி, விளாச்சேரி கண்மாய், திருநகா் சேமட்டன் ஊருணி, வயலூா், வைரவநத்தம் ஆகிய பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீா் நிலைகள், பராமரிப்பற்ற தனியாா் பட்டா நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அவா் ஆய்வு செய்தாா்.
பிறகு, மாவட்டத்தில் இதுவரை சீரமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்ட பரப்பு, எஞ்சியுள்ள பரப்பு ஆகியன குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

5 ஆண்டுகளுக்குள் சீமைக் கருவேல மரங்களின் பரவல் கட்டுப்படுத்தப்படும்: ஓய்வு பெற்ற நீதிபதி ஏ. செல்வம்

‘விரைவில் சீமைக் கருவேல மரங்களை இல்லாத மாவட்டமாக சிவகங்கை மாற்றப்படும்’

சீமைக் கருவேல மரங்களை அகற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் ஓய்வு பெற்ற நீதிபதி நேரில் ஆய்வு
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



