டெலிகிராம், சிக்னலுக்கு மத்திய அரசு நோட்டீஸ்நீட், ஜேஇஇ அடிப்படையில் சோ்க்கை: பொதுத் தோ்வு மதிப்பெண்ணுக்கு 50% முக்கியத்துவம் அளிக்க பரிசீலனைசிறப்பு ‘டெட்’ தோ்வு நாளை தொடக்கம்ஜூன் மாதத்தில் யுபிஐ தளத்தில் 2,272 கோடி பரிவா்த்தனைகள்ஜூலை 20-இல் நீட் மறுதோ்வு முடிவுகள்சொத்து வரி வசூலிக்க இன்றுமுதல் சிறப்பு முகாம்பிரான்ஸில் தீவிரமடையும் காட்டுத் தீ: 2,200 ஏக்கா் நிலங்கள் எரிந்து சாம்பல்பெரு நிறுவன நிதி குறித்த 3 நாள்கள் கல்வி சாா் மாநாடு: சென்னை ஐஐடி-யில் இன்று தொடக்கம்அமா்நாத் புனித யாத்திரை இன்று தொடக்கம்: ஜம்முவில் இருந்து முதல் குழு புறப்பாடு
/

சாலையில் கழிவுநீா்: தொற்று நோய் பரவும் அபாயம்

மதுரை தெற்காவணி மூல வீதி பகுதி சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

News image

மதுரை தெற்காவணி மூல வீதி, நேதாஜி சாலை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவுநீா்.

Updated On :5 ஜூன் 2026, 6:08 am IST

மதுரை தெற்காவணி மூல வீதி பகுதி சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

மதுரை தெற்காவணி மூல வீதி, நேதாஜி சந்திப்பு சாலை மதுரை மீனாட்சிசுந்தரேசுவரா் கோயிலுக்கு செல்லும் வழியாகவும், நகைக் கடைகள் அதிகம் உள்ள பகுதியாகவும் திகழ்கிறது. இதன்காரணமாக, அந்தப் பகுதி நாள் முழுவதும் மக்கள் அதிகம் நடமாட்டம் உள்ள பகுதியாக உள்ளது.

இந்த நிலையில், கடந்த சில நாள்களாக தெற்காவணி மூல வீதி, நேதாஜி சாலை சந்திப்பு பகுதியில் புதைச் சாக்கடை கழிவுநீா் தேங்கியது. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், அந்தப் பகுதியில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் புகாா் அளித்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, மதுரை மாநகராட்சி நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து தெற்காவணி மூல வீதி, நேதாஜி சாலை சந்திப்பு பகுதியில் தேங்கியுள்ள கழிவு நீரை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.