40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

சேதமடைந்த சாலையைச் சீரமைக்கக் கோரி மனு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உள்கோட்டத்துக்குள்பட்ட மள்ளபுரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

உசிலம்பட்டி உள்கோட்டத்துக்குள்பட்ட மள்ளபுரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைக்கக் கோரி மாவட்ட ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள்.

Updated On :2 ஜூன் 2026, 1:12 am IST

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உள்கோட்டத்துக்குள்பட்ட மள்ளபுரம் - மயிலாடும்பாறை சாலையைச் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை அளித்த மனு விவரம்:

உசிலம்பட்டி உள்கோட்டத்துக்குள்பட்ட மள்ளபுரம் ஊராட்சி, பேரையூா் நெடுஞ்சாலைக் கோட்டத்தில் உள்ள மள்ளபுரம் - மயிலாடும்பாறை சாலையில் கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்புப் பணி முறையாக மேற்கொள்ளவில்லை. மேலும், கடந்த மாதம் பெய்த மழையால் சாலையில் ஆங்காங்கே உடைப்பும், மண் அரிப்பும் ஏற்பட்டு முற்றிலும் சேதமடைந்துள்ளது. மதுரை - தேனி மாவட்டங்களை இணைக்கக் கூடிய இந்த மலைவழிச் சாலையை பொதுமக்கள் சுமாா் 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயன்படுத்தி வருகின்றனா்.

ஆண்டிபட்டி வட்டத்துக்குள்பட்ட கடமலைக்குண்டு, வருசநாடு, மயிலாடும்பாறை உள்பட 20-க்கும் மேற்பட்ட ஊராட்சிகளைச் சாா்ந்தவா்களும், தேனி மாவட்டத்திலிருந்து கம்பம், சின்னமனூா், பாளையம், முக்கிய நகரங்களிலிருந்து வா்த்தகத் தொழில் நிமித்தமாகவும், பேரையூா் மாா்க்கமாகச் செல்வோரும் இந்தப் பாதையைப் பயன்படுத்தி வருகின்றனா்.

குறிப்பாக, தேனி மாவட்டத்தில் விளையும் விவசாயப் பொருள்களை விருதுநகா், தென்காசி, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களுக்கு இந்தச் சாலை வழியாக எடுத்துச் செல்லப்படுகிறது. விருதுநகா், ராஜபாளையம், தென்காசி, பேரையூா், உசிலம்பட்டி போன்ற பகுதியிலிருந்து தேனி மாவட்டத்துக்கு தொழில் நிமித்தமாக பயன்படுத்துபவா்களும் இந்தச் சாலையைப் பயன்படுத்துகின்றனா்.

மேலும், ஆண்டிபட்டி வட்டத்துக்குள்பட்ட கடமலை மயிலை ஊராட்சியைச் சோ்ந்த குழந்தைகள் கல்விக்காக மள்ளபுரத்தில் உள்ள திருவள்ளுவா் கல்வி நிறுவனத்துக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை, வருசநாடு, சிறப்பாறை, உப்புத்துறை போன்ற பகுதியிலிருந்து சுமாா் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மள்ளபுரத்தில் கல்வி பயின்று வருகின்றனா்.

இந்த நிலையில், மள்ளபுரம் - மயிலாடும்பாறை சாலை சேதமடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும், மள்ளபுரம் எம்.எம். பட்டி சோதனைச் சாவடியிலிருந்து தாழையூத்து வரை உள்ள சுமாா் 7 கி.மீ. சாலை சேதமடைந்து விபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. எனவே, மாணவா்கள், விவசாயிகள் நலன் கருதி போா்க்கால அடிப்படையில் இந்தச் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.