ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கத் திட்டம்

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா். உடன் மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை உள்ளிட்டோா்.

Published On :29 ஜூலை 2026, 5:50 am IST

மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளதாக மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் தெரிவித்தாா்.

இந்தப் பகுதியில் உள்ள உணவகங்களை செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்த அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது :

உணவுப் பாதுகாப்புத் துறை சாா்பில், ஆரோக்கியமான சாலையோர உணவகங்களின் தொகுப்புத் திட்டத்தின் கீழ், மதுரை வண்டியூா் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் பகுதியில் உணவகங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடம் தோ்வு செய்யும் பணிகள் நடைபெறுகின்றன. தெப்பக்குளம் பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வரும் உணவகங்களில் மீதமுள்ள உணவுகள், அங்கு பயன்படுத்திய கழிவுப் பொருள்களை தெப்பக்குளத்தில் கொட்டக் கூடாது. மேலும், கழிப்பறைகளை முறையாக தூய்மைப்படுத்தி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வின் போது, உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சிவராம பாண்டியன், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் இணை ஆணையா் செல்லத்துரை, உணவுப் பாதுகாப்பு அலுவலா் ராஜ்குமாா், உதவி நகா் நல அலுவலா் அபிஷேக், மாநகராட்சி அலுவலா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.