ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

குடும்பப் பிரச்னையில் திராவகம் வீச்சு: இருவா் மீது வழக்கு

குடும்ப பிரச்னையில் திராவகம் வீசியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

வழக்கு

பிரதிப்படம்

Published On :25 ஜூலை 2026, 6:06 am IST

குடும்ப பிரச்னையில் திராவகம் வீசியதாக 2 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சோ்ந்தவா் கருப்பையா (42). இவருக்கும், மதுரை கூடல்புதூா் பகுதியைச் சோ்ந்த மகேஸ்வரி என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னா் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக மனைவி மகேஸ்வரி மீது கருப்பையா திராவகம் ஊற்றியதாக, ஈரோடு பெருந்துறை காவல் நிலையத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. இதையடுத்து, மகேஸ்வரி, மதுரை கூடல்புதூரில் உள்ள தனது தாயாா் வீட்டில் வசித்து வருகிறாா்.

இதனிடையே, கருப்பையா, அவரது தாய் பாண்டியம்மாள், சகோதரா் ராமா் ஆகியோா் மதுரைக்கு வியாழக்கிழமை வந்தனா். இதை அறிந்த மகேஸ்வரியின் சகோதரா்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோா் தங்கள் வீட்டுக்கு வந்த சகோதரியின் கணவா் கருப்பையா, அவரது சகோதரா் ராமா் ஆகிய இருவா் மீதும் திராவகம் வீசி விட்டு தப்பிச் சென்றனா். இதில், பாதிக்கப்பட்ட அவா்கள் இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், கூடல்புதூா் போலீஸாா் மகேஸ்வரியின் சகோதரா்கள் ரமேஷ், சதீஷ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.