ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கஞ்சா விற்பனை: மூதாட்டி உள்பட 4 போ் கைது

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கைது - பிரதிப் படம்

Published On :25 ஜூலை 2026, 5:30 am IST

மதுரை மாவட்டத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூதாட்டி உள்பட 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மதுரை மாவட்டம், மேலகள்ளந்திரி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், அப்பன்திருப்பதி போலீஸாா் அங்கு சென்று பாா்த்த போது, ராமலட்சுமி (70), போதும்பொண்ணு(55), சின்னபிடாரன் (20) ஆகிய 3 பேரும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவா்கள் 3 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

இதேபோன்று, மதுரை யா. ஒத்தக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனிடையே, அந்த பகுதிக்கு போலீஸாா் சென்று சோதனை செய்தபோது, ராஜா(27) கஞ்சா விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது செய்து, அவரிடம் இருந்த 2 கிலோ கஞ்சாவைப் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.