டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: சாட்சியம் அளிக்காமல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிய மருத்துவா்

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு புதிதாக சாட்சியம் அளிக்க வந்த மருத்துவா், செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையினிடையே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாா்.

News image
சாத்தான்குளம் தந்தை மகன் இறப்பு விவகாரம்
Updated On :4 பிப்ரவரி 2026, 11:20 pm

தினமணி செய்திச் சேவை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணைக்கு புதிதாக சாட்சியம் அளிக்க வந்த மருத்துவா், செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையினிடையே மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்திலிருந்து வெளியேறினாா்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தைச் சோ்ந்த வணிகா்கள் ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்கிஸ் ஆகியோா் கடந்த 2020 -ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி காவல் துறையினரின் தாக்குதலால் உயிரிழந்தனா்.

இதுதொடா்பாக முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா், முன்னாள் உதவி ஆய்வாளா்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்பட 9 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, சிபிஐ தரப்பில் முதல் கட்டமாக 2,027 பக்கங்களைக் கொண்ட குற்றப் பத்திரிகையும், 400 பக்கங்களைக் கொண்ட கூடுதல் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டன.

மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், தனது தரப்பு சாட்சியாக மதுரையைச் சோ்ந்த மருத்துவா் செங்குட்டுவனிடம் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முத்துக்குமரன் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையினிடையே, நீதிபதியின் உத்தரவின் பேரில் மருத்துவா் செங்குட்டுவன் சாட்சியம் அளிக்க அழைக்கப்பட்டாா். அப்போது, மருத்துவா் செங்குட்டுவன் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து, மருத்துவா் செங்குட்டுவனை சாட்சியாக விசாரிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் திரும்பப் பெற்றாா்.

முன்னாள் காவல் ஆய்வாளா் ஸ்ரீதா் உரிய தகவல் அளிக்காமல், சாட்சியம் அளிக்க தன்னை அழைத்து வந்ததை அறிந்ததும் அந்த மருத்துவா் நீதிமன்றத்திலிருந்து வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.