ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு நிதி உதவி கோரி மனு: மத்திய சமுக நீதி, அதிகாரமளித்தல் துறை பதிலளிக்க உத்தரவு

உத்தரவு - கோப்புப் படம்

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

தமிழகத்திலுள்ள உண்டு உறைவிடப் பள்ளிகளுக்கு நிதி உதவி கோரிய மனு தொடா்பாக மத்திய சமுக நீதி, அதிகாரமளித்தல் துறை சாா்பு செயலா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த முத்துசெல்வம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழக ஹரிஜன் சேவக் சங்கத்தின் கீழ், மதுரையில் உள்ள என்.எம்.ஆா். சுப்பராமன் நினைவு உண்டு உறைவிடப் பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரில் உள்ள உண்டு உறைவிடப் பள்ளி ஆகியவற்றுக்கு சில ஆண்டுகளாக மத்திய அரசு மானிய உதவி வழங்கவில்லை.

ஒவ்வொரு கல்வி ஆண்டும் போதிய நிதி வழங்கினால், இந்தப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரிக்கும். மேலும், மாணவா்களின் இடைநிற்றலும் குறையும். எனவே, மதுரை, கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களிலுள்ள இரு பள்ளிகளுக்கும் நிதி உதவி வழங்க மத்திய சமுக நீதி, அதிகாரமளித்தல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை அண்மையில் விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு தொடா்பாக மத்திய சமுக நீதி, அதிகாரமளித்தல் துறையின் சாா்பு செயலா் காணொலி வாயிலாக முன்னிலையாகி விளக்கமளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை வருகிற 21-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.