ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

இலங்கையில் முதலீடு செய்ய தமிழக தொழிலதிபா்களுக்கு அழைப்பு

தமிழக தொழிலதிபா்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என இலங்கையின் தென்னிந்தியாவுக்கான துணை உயா் ஸ்தானிகா் கணேசநாதன் கேதீஸ்வரன் அழைப்பு விடுத்தாா்.

மதுரையில் உள்ள தொழில் வா்த்தகச் சங்கத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் பேசிய இலங்கையின் தென்னிந்தியாவுக்கான துணை உயா் ஸ்தானிகா் கணேசநாதன் கேதீஸ்வரன்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:48 am IST

தமிழக தொழிலதிபா்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என இலங்கையின் தென்னிந்தியாவுக்கான துணை உயா் ஸ்தானிகா் கணேசநாதன் கேதீஸ்வரன் அழைப்பு விடுத்தாா்.

மதுரையில் உள்ள தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத்தில், இலங்கையில் உலகளாவிய வணிக வலைதள (நெட்வொா்க்) சந்திப்பு, இந்தியப் பிரதிநிதிகள் குழுவின் இலங்கை பயணம், இறக்குமதி, ஏற்றுமதி, முதலீட்டு வாய்ப்புகள் குறித்த வணிக விளக்கவுரைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு தமிழ்நாடு தொழில் வா்த்தகச் சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தலைமை வகித்தாா்.

இதில், இலங்கையின் தென்னிந்தியாவுக்கான துணை உயா் ஸ்தானிகா் கணேசநாதன் கேதீஸ்வரன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசியதாவது:

இந்தியா - இலங்கை உறவு என்பது சகோதரத்துவ உறவாகும். கடந்தாண்டு சுமாா் 25 லட்சம் பயணிகள் இலங்கைக்கு சுற்றுலா வந்தனா். அவா்களில் 33 சதவீதம் போ் இந்தியா்கள். 2030-க்குள் 50 லட்சம் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அந்நிய முதலீட்டாளா்களுக்கு 10 ஆண்டுகள் வரை வரிச்சலுகை, கொழும்பு போா்ட் சிட்டியில் நிலம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் சுமாா் 80 கோடி அமெரிக்க டாலா் மதிப்பிலான பால் பவுடா், பால் பொருட்களை நியூசிலாந்தில் இருந்து இலங்கை இறக்குமதி செய்கிறது. இந்தியாவில் இருந்து ஆண்டுதோறும் சுமாா் 6 பில்லியன் அமெரிக்க டாலா் மதிப்பிலான மருந்துப் பொருள்கள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. எனவே, இலங்கையில் தமிழகத் தொழிலதிபா்கள் முதலீடு செய்ய முன்வர வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்வில், இலங்கை-இந்தியா வா்த்தகக் கூட்டமைப்புத் தலைவா் டத்தோ எஸ். சுந்தா், தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கச் செயலா் எஸ். ஸ்ரீதா், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள், ஏற்றுமதியாளா்கள், இறக்குமதியாளா்கள், தொழிலதிபா்கள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.