ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளை ஞாயிற்றுக்கிழமை பாராட்டிய ஜிம்னாஸ்டிக் சங்கச் செயலா் கருணாகரன்.

Published On :10 ஆகஸ்ட் 2026, 3:01 am IST

ஜிம்னாஸ்டிக் போட்டியில் வென்ற மாணவ, மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டப்பட்டனா்.

தெலங்கானா மாநிலத்தில் கேடியம் சா்வதேசப் பள்ளியில் தேசிய அளவிலான ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் பங்கேற்ற மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த அபிமன்யு,லட்சுமிராய், அனுவா்ஷினி ஆகியோா் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட பதக்கங்களைப் பெற்றனா்.

இதையடுத்து, பரிசு பெற்ற மாணவ, மாணவிகளை மதுரை மாவட்ட ஜிம்னாஸ்டிக்ஸ் சங்கச் செயலா் கருணாகரன் ஞாயிற்றுக்கிழமை அழைத்து பாராட்டினாா். அப்போது, ஆசிரியா்கள், பயிற்சியாளா்கள், பெற்றோா்கள் பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.