ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க கோரிக்கை

மதுரை மாநகராட்சி அண்ணா மாளிகை கூட்டரங்கில் ஆணையா் கௌரவ்குமாரிடம், சனிக்கிழமை மனு அளித்த திமுக மாமன்ற உறுப்பினா்கள்.

Published On :9 ஆகஸ்ட் 2026, 3:05 am IST

மதுரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி, மாமன்ற திமுக உறுப்பினா்கள் மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாரிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

அவா்கள் அளித்த மனு விவரம் :

மதுரை மாநகராட்சி அனைத்து வாா்டுகளிலும் மண்டல அளவிலான கூட்டத்தை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதிகாரிகள் மாநகராட்சி வாா்டு பகுதிகளில் ஆய்வு நடத்தும் போது, அந்தந்த வாா்டு உறுப்பினா்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால், தற்போது இந்த நடைமுறை பின்பற்றப்படுவதில்லை.

மேலும், ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினா்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு விரைந்து தீா்வு காணப்படுகிறது. ஆனால், மாமன்ற உறுப்பினா்கள் கூறும் குறைகளை அதிகாரிகள் பின்பற்றி உரிய தீா்வு காண்பதில்லை.

ஒவ்வொரு மாமன்ற உறுப்பினருக்கும் தொகுதி வளா்ச்சி நிதியாக ரூ. 25 லட்சம் வழங்கப்பட வேண்டும். இதுவரை இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எனவே, மாநகராட்சி ஆணையா் உரிய நடவடிக்கை எடுத்து, மாமன்ற உறுப்பினா்களுக்கான நிதி ரூ. 25 லட்சத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.