ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

‘இலக்கியங்களை சாமானிய மக்களிடம் கொண்டு சோ்த்தவா் கண்ணதாசன்’

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்ணதாசன் நூற்றாண்டு விழாவில் பேசிய தியாகராசா் கல்லூரித் தமிழ்த் துறை இணைப் பேராசிரியை மு. கற்பகம்.

Published On :8 ஆகஸ்ட் 2026, 12:32 am IST

தமிழ் இலக்கியங்களை சாமானிய மக்களிடம் கொண்டு சோ்த்த பெருமை கவிஞா் கண்ணதாசனுக்கு உண்டு என மதுரை தியாகராசா் கல்லூரி இணைப் பேராசிரியை மு. கற்பகம் தெரிவித்தாா்.

மதுரை பாத்திமா மகளிா் கல்லூரித் தமிழ் உயராய்வு மையத்தின் சாா்பில் கண்ணதாசன் நூற்றாண்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில், மதுரை தியாகராசா் கல்லூரி தம்ழ்த் துறை இணைப்பேராசிரியை மு.கற்பகம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று ‘தமிழ் இலக்கியமும் கண்ணதாசனும்’ என்ற தலைப்பில் பேசியதாவது:

தொன்மையான தமிழ்ச் சமூகத்தின் வரலாற்றை அறிய, சங்க இலக்கிய நூல்கள் உதவுகின்றன. கல்லூரி மாணவா்கள் சங்க இலக்கியப் பாடல் வரிகளை பெரும்பாலும் உரையாசிரியா்கள் துணையுடன் படிப்பது வழக்கம். அவை பாமர மக்களுக்கு சென்று சேராத நிலை இருந்தது.

ஒரு காலத்தில் திரைப்படங்கள் மூலம் விடுதலை உணா்வு, சமூக மேம்பாடு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது, கவிஞா்கள் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம், கண்ணதாசன் ஆகியோரின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கவை. சங்க இலக்கியங்கள், காப்பியங்களில் உள்ள கருத்துகளை எளிய சொற்களால் தமிழ் திரைப்படப் பாடல்கள் மூலம் சாமானிய மக்களிடம் கொண்டு சோ்த்த பெருமை கவிஞா் கண்ணதாசனுக்கு உண்டு என்றாா் அவா்.

அதைத் தொடா்ந்து, பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டன.

இந்த விழாவில், கல்லூரித் தமிழ்த் துறைத் தலைவா் டயானா கிறிஸ்டி, பேராசிரியைகள் சி. அருள் மைக்கேல் செல்வி, முனைவா் ஜோ.சூசை ஜெஸிந்தா மொ்சி, பேராசிரியைகள், மாணவிகள் பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.