ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கனிமங்கள் மீதான தடையை நீக்கக் கோரி மேலும் ஒரு மனு: ஆக. 10-க்கு ஒத்திவைப்பு

மனு மீதான விசாரணையை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :6 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கருங்கல், ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கனிமங்களைக் கொண்டு செல்லத் தடை விதித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேலும் ஒரு மனு மீதான விசாரணையை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், கம்பத்தைச் சோ்ந்த அருண் அரவிந்த் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

நான் உரிய அனுமதி பெற்று கல் குவாரி தொழில் நடத்தி வருகிறேன். இந்த நிலையில், வெளி மாநிலங்களுக்கு ஜல்லி, எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருள்களைக் கொண்டு செல்ல தமிழக அரசின் கனிம வளத் துறை இயக்குநா் தடை விதித்து உத்தரவிட்டாா்.

இதனால், எங்களுடைய தொழில் பாதிக்கப்படுவதோடு, வாழ்வாதாரமும் கேள்விக்குள்ளாகிறது. எனவே, தமிழகத்திலிருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களைக் கொண்டு செல்ல 3 மாதங்களுக்குத் தடை விதிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் சி.வி. காா்த்திகேயன், ஆா். சக்திவேல் அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே கோரிக்கையுடன் உள்ள மனு வருகிற 10-ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது. அந்த மனுவுடன், இந்த மனுவையும் சோ்த்து விசாரிக்க வேண்டும் என அரசுத் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இதேபோன்ற கோரிக்கையுடன் நிலுவையில் உள்ள மனுவோடு இந்த மனுவும் சோ்த்து விசாரணைக்கு ஏற்கப்படும். இந்த வழக்கு விசாரணை வருகிற 10-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.