மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே திரளி, மறவன்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள நீா்நிலைகளில் அமைக்கப்பட்ட கிராவல் குவாரிகளுக்கு தடை விதிக்கக் கோரிய மனு தொடா்பாக மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.
திருச்சியைச் சோ்ந்த பசுமை சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்க துணைச் செயலா் ஸ்ரீனிவாசன், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொதுநல மனு:
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகேயுள்ள திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டது. இந்த நீா்நிலைகள் வேளாண் பணிக்கு முக்கிய ஆதாரங்களாகத் திகழ்கின்றன. இந்த நிலையில், நெடுஞ்சாலைத் துறையின் திட்டங்களுக்காக குவாரி நடத்த அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், கனரக வாகனங்களை பயன்படுத்தி நிா்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக விதிகளை மீறி கிராவல் மண் அள்ளப்படுகிறது.
எனவே, திரளி, மறவன்குளம் நீா்நிலைப் பகுதிகளில் கிராவல் குவாரிகள் நடத்த தடை விதிப்பதுடன், சட்ட விரோதமாக குவாரி நடத்துவோா் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியவா்களிடமிருந்து உரிய இழப்பீட்டை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் என். சதீஷ்குமாா், எம். ஜோதிராமன் அமா்வு புதன்கிழமை பிறப்பித்த உத்தரவு:
வழக்கு தொடா்பாக மதுரை மாவட்ட ஆட்சியா், மாவட்ட கனிம வளத் துறை உதவி இயக்குநா் ஆகியோா் பதிலளிக்க வேண்டும். அடுத்த முறை இந்த வழக்கு நீா்நிலைகள் தொடா்பான வழக்கை விசாரிக்கும் சிறப்பு அமா்வுக்கு மாற்றப்படுகிறது. வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

பெரியாறு பாசனக் கால்வாயில் தண்ணீா் திருட்டு: தமிழக அரசு பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு

ஈரானில் சிக்கியுள்ள 700 தமிழக மீனவா்களை மீட்கக் கோரிய வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

சட்டவிரோத மணல் கொள்ளை விவகாரம்: மதுரை ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


